நீங்கள் நினைத்ததை அடைய வேண்டுமா?


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



    1. சூரா அல்ஃபாத்திஹா

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

Bபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

(அல்குர்ஆன் : 1:1)


اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அல்குர்ஆன் : 1:2)


الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

அர்-ரஹ்மானிர்-ரஹீம்

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் : 1:3)


مٰلِكِ يَوْمِ الدِّيْنِ‏

மாலிகி யவ்மித்-தீன்

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

(அல்குர்ஆன் : 1:4)


اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

இய்யாக னஃBபுது வ இய்யாக னஸ்த'ஈன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

(அல்குர்ஆன் : 1:5)


اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

இஹ்தினஸ்-ஸிராதல்-முஸ்தகீம்

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

(அல்குர்ஆன் : 1:6)


صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏

ஸிராதல்-லதீன அன்'அம்த 'அலய்ஹிம் கய்ரில்-மக்ளூBபி 'அலய்ஹிம் வ லள்-ளால்லீன்

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

(அல்குர்ஆன் : 1:7)

2. சூரா அல்பகரா (287286)

اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏

ஆமனர்-ரஸூலு Bபிமா உன்Zஜில இலய்ஹி மிர்-ரBப்Bபிஹீ வல்மு'மினூன்; குல்லுன் ஆமன Bபில்லாஹி வ மலா'இகத்ஹிஹீ வ குதுBப்ஹி வ ருஸுலிஹீ லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம்-மிர்-ருஸுலிஹ் வ காலூ ஸமிஃனா வ அதஃனா குFப்ரானக ரBப்Bபனா வ இலய்கல்-மஸீர்

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

(அல்குர்ஆன் : 2:285)


لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏

லா யுகல்லிFபுல்-லாஹு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா; லஹா மா கஸBபத் வ 'அலய்ஹா மக்தஸBபத்; ரBப்Bபனா லா து'ஆகித்னா இன் னஸீனா அவ் அக்தானா; ரBப்Bபனா வலா தஹ்மில்-'அலய்னா இஸ்ரன் கமா ஹமல்தஹூ 'அலல்-லதீன மின் கBப்லினா; ரBப்Bபனா வலா துஹம்மில்னா மா லா தாகத லனா Bபிஹ்; வஃFபு 'அன்னா வக்Fபிர் லனா வர்ஹம்னா; அன்த மவ்லானா Fபன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

(அல்குர்ஆன் : 2:286)




Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்