19. மர்யம்
- Get link
- X
- Other Apps
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 19:0)
كٓهٰيٰـعٓـصٓ
காFப்-ஹா-யா-'அய்ய்ய்ன்-ஸாத்
காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
(அல்குர்ஆன் : 19:1)
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا
திக்ரு ரஹ்மதி ரBப்Bபிக 'அBப்தஹூ Zஜகரிய்யா
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
(அல்குர்ஆன் : 19:2)
اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا
இத் னாதா ரBப்Bபஹூ னிதா'அன் கFபிய்யா
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
(அல்குர்ஆன் : 19:3)
قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا
கால ரBப்Bபி இன்னீ வஹனல் 'அள்மு மின்னீ வஷ்த 'அலர் ர'ஸு ஷய்Bப(ன்)வ் வ லம் அகுன் Bபிது'ஆ'இக ரBப்Bபி ஷகிய்யா
(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
(அல்குர்ஆன் : 19:4)
وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ
வ இன்னீ கிFப்துல் மவாலிய மி(ன்)வ் வரா'ஈ வ கானத் இம்ர அதீ 'அகிரன் Fப ஹBப்லீ மில் லதுன்க வலிய்யா
“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
(அல்குர்ஆன் : 19:5)
يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
(அல்குர்ஆன் : 19:6)
يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا
யா Zஜகரிய்யா இன்னா னுBபஷ்ஷிருக Bபி குலாமின் இஸ்முஹூ யஹ்யா லம் னஜ்'அல் லஹூ மின் கBப்லு ஸமிய்யா
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
(அல்குர்ஆன் : 19:7)
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வகானத் இம்ர அதீ 'ஆகிர(ன்)வ் வ கத் Bபலக்து மினல் கிBபரி 'இதிய்யா
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 19:8)
قَالَ كَذٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا
கால கதாலிக கால ரBப்Bபுக ஹுவ 'அலய்ய ஹய்யினு(ன்)வ் வ கத் கலக்துக மின் கBப்லு வ லம் தகு ஷய்'ஆ
“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
(அல்குர்ஆன் : 19:9)
قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயஹ்; கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாத லயாலின் ஸவிய்யா
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 19:10)
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا
Fபகரஜ 'அலா கவ்மிஹீ மினல் மிஹ்ராBபி Fப-அவ்ஹா இலய்ஹிம் அன் ஸBப்Bபிஹூ Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
(அல்குர்ஆன் : 19:11)
يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ
யா யஹ்யா குதில் கிதாBப Bபிகுவ்வதி(ன்)வ் வ ஆதய்னாஹுல் ஹுக்ம ஸBபிய்யா
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
(அல்குர்ஆன் : 19:12)
وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً وَّكَانَ تَقِيًّا ۙ
வ ஹனானம் மில் லதுன்னா வ Zஜகாத(ன்)வ் வ கான தகிய்யா
அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:13)
وَّبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا
வ Bபர்ரம் Bபிவாலிதய்ஹி வ லம் யகும் ஜBப்Bபாரன் 'அஸிய்யா
மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
(அல்குர்ஆன் : 19:14)
وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
வ ஸலாமுன் 'அலய்ஹி யவ்ம வுலித வ யவ்ம யமூது வ யவ்ம யுBப்'அது ஹய்ய்யா
ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன் : 19:15)
وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ
வத்குர் Fபில் கிதாBபி மர்யம; இதின் தBபதத் மின் அஹ்லிஹா மகானன் ஷர்கிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
(அல்குர்ஆன் : 19:16)
فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا
Fபத்தகதத் மின் தூனிஹிம் ஹிஜாBபன் Fப அர்ஸல்னா இலய்ஹா ரூஹனா Fபதமத்தல லஹா Bபஷரன் ஸவிய்யா
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
(அல்குர்ஆன் : 19:17)
قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا
காலத் இன்னீ அ'ஊது Bபிர் ரஹ்மானி மின்க இன் குன்த தகிய்யா
(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
(அல்குர்ஆன் : 19:18)
قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا
கால இன்னமா அன ரஸூலு ரBப்Bபிகி லி அஹBப லகி குலாமன் Zஜகிய்யா
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:19)
قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا
காலத் அன்ன யகூனு லீ குலாமு(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷ்ரு(ன்)வ் வ லம் அகு Bபகிய்யா
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:20)
قَالَ كَذٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا
கால கதாலிகி கால ரBப்Bபுகி ஹுவ 'அலய்ய ஹய்யிமு(ன்)வ் வ லினஜ் 'அலஹூ ஆயதல் லின்னாஸி வ ரஹ்மதம் மின்னா; வ கான அம்ரம் மக்ளிய்யா
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 19:21)
فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
Fபஹமலத் ஹு Fபன்தBபதத் Bபிஹீ மகானன் கஸிய்யா
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
(அல்குர்ஆன் : 19:22)
فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا
Fப அஜா 'அஹல் மகாளு இலா ஜித்'இன் னக்லதி காலத் யா லய்தனீ மித்து கBப்ல ஹாதா வ குன்து னஸ்யம் மன்ஸிய்யா
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
(அல்குர்ஆன் : 19:23)
فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا
Fபனாதாஹா மின் தஹ்திஹா அல்லா தஹ்Zஜனீ கத் ஜ'அல ரBப்Bபுகி தஹ்தகி ஸரிய்யா
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
(அல்குர்ஆன் : 19:24)
وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا
வ ஹுZஜ்Zஜீ இலய்கி Bபிஜித் 'இன் னக்லதி துஸாகித் 'அலய்கி ருதBபன் ஜனிய்யா
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
(அல்குர்ஆன் : 19:25)
فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا
Fபகுலீ வஷ்ரBபீ வ கர்ரீ 'அய்னா; Fப இம்மா தரயின்ன்ன மினல் Bபஷரி அஹதன் Fபகூலீ இன்னீ னதர்து லிர் ரஹ்மானி ஸவ்மன் Fபலன் உகல்லிமல் யவ்ம இன்ஸிய்யா
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
(அல்குர்ஆன் : 19:26)
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا
Fப அதத் Bபிஹீ கவ்மஹா தஹ்மிலுஹூ காலூ யா மர்யமூ லகத் ஜி'தி ஷய்'அன் Fபரிய்யா
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
(அல்குர்ஆன் : 19:27)
يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا
யா உக்த ஹாரூன மா கான அBபூகிம்ர'அ ஸவ்'இ(ன்)வ் வமா கானத் உம்முகி Bபகிய்யா
“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
(அல்குர்ஆன் : 19:28)
فَاَشَارَتْ اِلَيْهِ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا
Fப அஷாரத் இலய்ஹ்; காலூ கய்Fப னுகல்லிமு மன் கான Fபில் மஹ்தி ஸBபிய்யா
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 19:29)
قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ
கால இன்னீ 'அBப்துல்லாஹி ஆதானியல் கிதாBப வ ஜ'அலனீ னBபிய்யா
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 19:30)
وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا
வ ஜ'அலனீ முBபாரகன் அய்ன மா குன்து வ அவ்ஸானீ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி மா தும்து ஹய்யா
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 19:31)
وَّبَرًّابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا
வ Bபர்ரம் Bபிவாலிததீ வ லம் யஜ்'அல்னீ ஜBப்Bபாரன் ஷகிய்யா
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
(அல்குர்ஆன் : 19:32)
وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا
வஸ்ஸலாமு 'அலய்ய யவ்ம வுலித்து வ யவ்ம அமூது வ யவ்ம உBப்'அது ஹய்யா
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
(அல்குர்ஆன் : 19:33)
ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ
தாலிக 'ஈஸBப்-னு மர்யம; கவ்லல் ஹக்கில் லதீ Fபீஹி யம்தரூன்
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
(அல்குர்ஆன் : 19:34)
مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍۙ سُبْحٰنَهٗ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ
மா கான லில்லாஹி அய் யத்தகித மி(ன்)வ் வலதின் ஸுBப்ஹானஹ்; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fப யகூன்
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் : 19:35)
وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ
வ இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
(அல்குர்ஆன் : 19:36)
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَيْنِهِمْ فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ يَوْمٍ عَظِيْمٍ
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fபவய்லுல் லில்லதீன கFபரூ மின் மஷ்ஹதி யவ்மின் 'அளீம்
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
(அல்குர்ஆன் : 19:37)
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَاْتُوْنَنَا لٰـكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
அஸ்மிஃ Bபிஹிம் வ அBப்ஸிர் யவ்ம ய'தூனனா லாகினிள் ளாலிமூனல் யவ்ம Fபீ ளலாலின் முBபீன்
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 19:38)
وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِىَ الْاَمْرُۘ وَهُمْ فِىْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ
வ அன்திர்ஹும் யவ்மல் ஹஸ்ரதி இத் குளியல் அம்ர்; வ ஹும் Fபீ கFப்லதி(ன்)வ் வ ஹும் லா யு'மினூன்
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 19:39)
اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا وَاِلَـيْنَا يُرْجَعُوْنَ
இன்னா னஹ்னு னரிதுல் அர்ள வ மன் 'அலய்ஹா வ இலய்னா யுர்ஜ'ஊன்
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன் : 19:40)
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا
வத்குர் Fபில் கிதாBபி இBப்ராஹீம்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:41)
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا
இத் கால லி அBபீஹி யா அBபதி லிம தஃBபுது மா லா யஸ்ம'உ வலா யுBப்ஸிரு வலா யுக்னீ 'அன்க ஷய்'ஆ
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
(அல்குர்ஆன் : 19:42)
يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا
யா அBபதி இன்னீ கத் ஜா'அனீ மினல் 'இல்மி மா லம் ய'திக Fபத்தBபி'னீ அஹ்திக ஸிராதன் ஸவிய்யா
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
(அல்குர்ஆன் : 19:43)
يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا
யா அBபதி லா தஃBபுதிஷ் ஷய்தான்; இன்னஷ் ஷய்தான கான லிர் ரஹ்மானி 'அஸிய்யா
“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
(அல்குர்ஆன் : 19:44)
يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا
யா அBபதி இன்னீ அகாFபு அய் யமஸ்ஸக 'அதாBபும் மினர் ரஹ்மானி Fபதகூன லிஷ் ஷய்தானி வலிய்யா
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
(அல்குர்ஆன் : 19:45)
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
கால அராகிBபுன் அன்த 'அன் ஆலிஹதீ யா இBப்ராஹீமு ல 'இல் லம் தன்தஹி ல அர்ஜுமன்னக வஹ்ஜுர்னீ மலிய்யா
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
(அல்குர்ஆன் : 19:46)
قَالَ سَلٰمٌ عَلَيْكَ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا
கால ஸலாமுன் 'அலய்க ஸ அஸ்தக்Fபிரு லக ரBப்Bபீ இன்னஹூ கான Bபீ ஹFபிய்யா
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:47)
وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا
வ அஃதZஜிலுகும் வமா தத்'ஊன மின் தூனில் லாஹி வ அத்'ஊ ரBப்Bபீ 'அஸா அல்லா அகூன Bபிது'ஆ'இ ரBப்Bபீ ஷகிய்யா
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).
(அல்குர்ஆன் : 19:48)
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا
Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 19:49)
وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا
வ வஹBப்னா லஹும் மிர்ரஹ்மதினா வ ஜ'அல்னா லஹும் லிஸான ஸித்கின் 'அலிய்யா
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
(அல்குர்ஆன் : 19:50)
وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا
வத்குர் Fபில் கிதாBபி மூஸா; இன்னஹூ கான முக்லஸ(ன்)வ் வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:51)
وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا
வ னாதய்னாஹு மின் ஜானிBபித் தூரில் அய்மனி வ கர்ரBப்னாஹு னஜிய்யா
இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
(அல்குர்ஆன் : 19:52)
وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا
வ வஹBப்னா லஹூ மிர் ரஹ்மதினா அகாஹு ஹாரூன னBபிய்யா
மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
(அல்குர்ஆன் : 19:53)
وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا
வத்குர் Fபில் கிதாBபி இஸ்மா'ஈல்; இன்னஹூ கான ஸாதிகல் வஃதி வ கான ரஸூலன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:54)
وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا
வ கான ய'முரு அஹ்லஹூ Bபிஸ் ஸலாதி வZஜ் Zஜகாதி வ கான 'இன்த ரBப்Bபிஹீ மர்ளிய்யா
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:55)
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ
வத்குர் Fபில் கிதாBபி இத்ரீஸ்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:56)
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا
வ ரFபஃனாஹு மகானன் 'அலிய்யா
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 19:57)
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
(அல்குர்ஆன் : 19:58)
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ
FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபுன் அளா'உஸ் ஸலாத வத்தBப'உஷ் ஷஹவாதி Fபஸவ்Fப யல்கவ்ன கய்ய்யா
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(அல்குர்ஆன் : 19:59)
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ
இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
(அல்குர்ஆன் : 19:60)
جَنّٰتِ عَدْنٍ اۨلَّتِىْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِيًّا
ஜன்னாதி 'அத்னினில் லதீ வ'அதர் ரஹ்மானு இBபாதஹூ Bபில்கய்Bப்; இன்னஹூ கான வஃதுஹூ ம'திய்யா
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
(அல்குர்ஆன் : 19:61)
لَّا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا اِلَّا سَلٰمًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا
லா யஸ்ம'ஊன Fபீஹா லக்வன் இல்லா ஸலாமா; வ லஹும் ரிZஜ்குஹும் Fபீஹா Bபுக்ரத(ன்)வ் வ 'அஷிய்யா
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 19:62)
تِلْكَ الْجَـنَّةُ الَّتِىْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا
தில்கல் ஜன்னதுல் லதீ னூரிது மின் 'இBபாதினா மன் கான தகிய்யா
இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
(அல்குர்ஆன் : 19:63)
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰ لِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا
வமா னதனZஜ்Zஜலு இல்லா Bபி அம்ரி ரBப்Bபிக லஹூ மா Bபய்ன அய்தீனா வமா கல்Fபனா வமா Bபய்ன தாலிக்; வமா கான ரBப்Bபுக னஸிய்யா
(மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”
(அல்குர்ஆன் : 19:64)
رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா FபஃBபுத் ஹு வஸ்தBபிர் லி'இBபாததிஹ்; ஹல் தஃலமு லஹூ ஸமிய்யா
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
(அல்குர்ஆன் : 19:65)
وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا
வ யகூலுல் இன்ஸானு 'அ இதா மா மித்து லஸவ்Fப உக்ரஜு ஹய்யா
(எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
(அல்குர்ஆன் : 19:66)
اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا
'அ வலா யத்குருல் இன்ஸானு அன்னா கலக்னாஹு மின் கBப்லு வ லம் யகு ஷய்'ஆ
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் : 19:67)
فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا
Fபவ ரBப்Bபிக லனஹ்ஷு ரன்னஹும் வஷ் ஷயாதீன தும்ம லனுஹ்ளிரன்னஹும் ஹவ்ல ஜஹன்னம ஜிதிய்யா
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
(அல்குர்ஆன் : 19:68)
ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا
தும்ம லனன் Zஜி'அன்ன மின் குல்லி ஷீ'அதின் அய்யுஹும் அஷத்து 'அலர் ரஹ்மானி 'இதிய்யா
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
(அல்குர்ஆன் : 19:69)
ثُمَّ لَـنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْلٰى بِهَا صِلِيًّا
தும்ம லனஹ்னு அஃலமு Bபில்லதீன ஹும் அவ்லா Bபிஹா ஸிலிய்யா
பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
(அல்குர்ஆன் : 19:70)
وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
வ இன் மின்கும் இல்லா வாரிதுஹா; கான 'அலா ரBப்Bபிக ஹத்மம் மக்ளிய்யா
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
(அல்குர்ஆன் : 19:71)
ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا
தும்ம னுனஜ்ஜில் லதீனத் தகவ் வ னதருள் ளாலிமீன Fபீஹா ஜிதிய்யா
அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
(அல்குர்ஆன் : 19:72)
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙ اَىُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ அய்யுல் Fபரீகய்னி கய்ரும் மகாம(ன்)வ் வ அஹ்ஸனு னதிய்யா
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
(அல்குர்ஆன் : 19:73)
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا
வ கம் அஹ்லக்னா கBப்லஹும் மின் கர்னின் ஹும் அஹ்ஸனு அதாத(ன்)வ் வ ரி'யா
இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 19:74)
قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ فَسَيَـعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا
குல் மன் கான Fபிள்ள லாலதி Fபல்யம்துத் லஹுர் ரஹ்மானு மத்தா; ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன இம்மல் 'அதாBப வ இம்மஸ் ஸா'அத Fபஸ யஃலமூன மன் ஹுவ ஷர்ரும் மகான(ன்)வ் வ அத்'அFபு ஜுன்தா
“யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 19:75)
وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًى وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا
வ யZஜீதுல் லாஹுல் லதீனஹ் ததவ் ஹுதா; வல் Bபாகியாதுஸ் ஸாலிஹாது கய்ருன் 'இன்த ரBப்Bபிக தவாBப(ன்)வ் வ கய்ரும் மரத்தா
“மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
(அல்குர்ஆன் : 19:76)
اَفَرَءَيْتَ الَّذِىْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا
அFபர'அய்தல் லதீ கFபர Bபி ஆயாதினா வ கால ல ஊத யன்ன மால(ன்)வ் வ வலதா
“நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
(அல்குர்ஆன் : 19:77)
اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ
'அத் தல'அல் கய்Bப 'அமித் தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
(பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
(அல்குர்ஆன் : 19:78)
كَلَّا سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ
கல்லா; ஸனக்துBபு மா யகூலு வ னமுத்து லஹூ மினல் 'அதாBபி மத்தா
அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
(அல்குர்ஆன் : 19:79)
وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَاْتِيْنَا فَرْدًا
வ னரிதுஹூ மா யகூலு வ ய'தீனா Fபர்தா
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
(அல்குர்ஆன் : 19:80)
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் லியகூனூ லஹும் 'இZஜ்Zஜா
(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
(அல்குர்ஆன் : 19:81)
كَلَّا سَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا
கல்லா; ஸ யக்Fபுரூன Bபி'இBபாததிஹிம் வ யகூனூன 'அலய்ஹிம் ளித்தா
அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
(அல்குர்ஆன் : 19:82)
اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّيٰـطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ
அலம் தர அன்னா அர்ஸல்னஷ் ஷயாதீன 'அலல் காFபிரீன த'உZஜ்Zஜுஹும் அZஜ்Zஜா
காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
(அல்குர்ஆன் : 19:83)
فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ اِنَّمَا نَـعُدُّ لَهُمْ عَدًّا
Fபலா தஃஜல் அலய்ஹிம் இன்னமா ன 'உத்து லஹும் 'அத்தா
எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
(அல்குர்ஆன் : 19:84)
يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا ۙ
யவ்ம னஹ்ஷுருல் முத்தகீன இலர் ரஹ்மானி வFப்தா
அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
(அல்குர்ஆன் : 19:85)
وَّنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَـنَّمَ وِرْدًا ۘ
வ னஸூகுல் முஜ்ரிமீன இலா ஜஹன்னம விர்தா
குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
(அல்குர்ஆன் : 19:86)
لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ
லா யம்லிகூனஷ் ஷFபா'அத இல்லா மனித்தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 19:87)
وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا
வ காலுத் தகதர் ரஹ்மானு வலதா
இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 19:88)
لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ
லகத் ஜி'தும் ஷய்'அன் இத்தா
“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
(அல்குர்ஆன் : 19:89)
تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ
தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின்ஹு வ தன்ஷக் குல் அர்ளு வ தகிர்ருல் ஜிBபாலு ஹத்தா
இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
(அல்குர்ஆன் : 19:90)
اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا
அன் த'அவ் லிர் ரஹ்மானி வலதா
அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
(அல்குர்ஆன் : 19:91)
وَمَا يَنْبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا
வமா யம்Bபகீ லிர் ரஹ்மானி அய் யத்தகித வலதா
ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
(அல்குர்ஆன் : 19:92)
اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا
இன் குல்லு மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி இல்லா ஆதிர் ரஹ்மானி 'அBப்தா
ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 19:93)
لَـقَدْ اَحْصٰٮهُمْ وَعَدَّهُمْ عَدًّا
லகத் அஹ்ஸாஹும் வ அத்தஹும் 'அத்தா
நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
(அல்குர்ஆன் : 19:94)
وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا
வ குல்லுஹும் ஆதீஹி யவ்மல் கியாமதி Fபர்தா
கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
(அல்குர்ஆன் : 19:95)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
(அல்குர்ஆன் : 19:96)
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக லிதுBபஷ்ஷிர Bபிஹில் முத்தகீன வ துன்திர Bபிஹீ கவ்மல் லுத்தா
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
(அல்குர்ஆன் : 19:97)
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا
வ கம் அஹ்லக்னா கBப்ல ஹும் மின் கர்னின் ஹல் துஹிஸ்ஸு மின்ஹும் மின் அஹதின் அவ் தஸ்ம'உ லஹும் ரிக்Zஜா
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
(அல்குர்ஆன் : 19:98)
- Get link
- X
- Other Apps
